மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்யும் தனுஷ்: கவலையில் ரசிகர்கள்..!

கார்த்திக் நரேன்
இயக்கத்தில்
தனுஷ்
நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘
மாறன்
‘.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப்படம் தோல்வியடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘மாறன்’ படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

நேர்மையான பத்திரிக்கையாளராக இருந்து குழந்தைகளின் இறப்பிற்கு காரணமானவர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததால் தனுஷின் அப்பாவான ராம்கியை கொன்று விடுகின்றனர். இரண்டாவது பிரசவத்தின்போது தனுஷின் அம்மாவும் இறந்து விடுகிறார். பின்பு தன் தங்கையை தானே வளர்க்கிறார் தனுஷ். அப்பாவைப் போலவே தனுசும் நேர்மையான பத்திரிகையாளராக மாறுகிறார்.

தலைவர் பொண்ணு எப்பவும் சந்தோஷமா இருக்கணும்: ஐஸ்வர்யா குறித்து லாரன்ஸ் நெகிழ்ச்சி..!

இதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தனுஷ் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே ‘மாறன்’ படத்தின் கதை. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அதர பழசான ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் தனுஷ் இந்தக்கதையை எப்படி தேர்ந்தெடுத்தார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

‘அசுரன்’ படத்தை தொடர்ந்து வெளியான தனுஷின் படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும்படியான வெற்றிகளை பெறவில்லை. ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே என இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது. தனுஷின் படங்கள் தொடர்ச்சியாக சறுக்கி வருவது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“Radhe Shyam” படம் எப்படி இருக்கு ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.