உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய ராணுவ யுத்தம் 19-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்ய ராணுவப் படையினர் பள்ளிகள், மருத்துவமனைகள் என பாராமல் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என உக்ரைன் ரஷ்யா மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகர மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யப் படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் காண்போரைக் கண்கலங்க வைக்கின்றன. அதில் சில படங்களைப் பின்வருமாறு காணலாம்,

உக்ரைனின் மரியுபோல் நகரில் கடந்த மார்ச் 9-ம் தேதி ரஷ்யப் படையினர் ஷெல் தாக்குதல் நடத்தியதில் சேதமடைந்த மகப்பேறு மருத்துவமனை.

மார்ச் 9-ம் தேதி மரியுபோல் நகர மகப்பேறு மருத்துவமனை வெளியே ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் பற்றி எரியும் கார்.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால், மரியானா விஷேகிர்ஸ்கயா என்ற கர்ப்பிணிப் பெண் மரியுபோல் மகப்பேறு மருத்துவமனையிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடம் தேடி படிக்கட்டிலிருந்து ஓடிவரும் காட்சி.

நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

