'அங்க நடிக்காதீங்க' – ரச்சிதாவுக்கு வந்த எச்சரிக்கை

விஜய் டிவியில் 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் ரச்சிதா ஹீரோயினாக நடித்து வந்த போது, அவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவருக்கும் விஜய் டிவி சீரியல் குழுவிற்கு இடையே சலசலப்பு ஏற்படவே, சில தினங்களில் ரச்சிதா அந்த தொடரை விட்டு வெளியேறினார். அதன்பிறகு அவர் சில நாட்கள் கழித்து கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில், விதவை தாய் கதாபாத்திரத்தில் ரச்சிதா நடிக்க இருந்த தகவல் வெளியாகி கவனம் ஈர்த்தது. அப்போது பலரும் ரச்சிதாவிடம் அந்த சேனலில் நடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் லைவ் ஒன்றில் பேசிய ரச்சிதா, 'அந்த சேனலில் நடிக்காதீங்க! அந்த கதாபாத்திரத்தில் நடிச்சா பெயர் கெட்டுப்போகும்னு வாண்டட்டா வந்து பயமுறுத்தினாங்க. எங்க போனாலும் கெடுத்துவிடுறதுக்கு ஒரு கும்பல் இருக்கு' என தான் மிரட்டப்பட்ட கதையை தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இது சொல்ல மறந்த கதை' தொடர் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்து பாலிமர் சேனலில் தமிழில் டப்பாகி ஒளிபரப்பான 'நெஞ்சம் பேசுதே' தொடரின் ரீமேக் ஆகும். ரச்சிதா மற்றும் விஷ்ணு விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.