"ஆட்டம் இன்னும் முடியவில்லை" – ஜனாதிபதி தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி சூசகம்

நாடு முழுவதும் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இல்லாததால், வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது பாஜகவுக்கு எளிதானது அல்ல என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சமீபத்தில் 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இல்லாததால் வெற்றி பெறுவது எளிதல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். “ஜனாதிபதி தேர்தல் இந்த முறை பாஜகவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. நாட்டில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களில் பாதி கூட அவர்களிடம் இல்லை. எதிர்க்கட்சிகள் சேர்ந்து நாடு முழுவதும் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்,” என்று சட்டசபையில் அவர் கூறினார்.
மோடியை ஆட்சியில் இருந்து நீக்குவதே அடுத்த இலக்கு - மம்தா பானர்ஜி || Tamil  news Mamata Banerjee says Modi has to be removed from power
“ஆட்டம் இன்னும் முடியவில்லை. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த சமாஜ்வாடி போன்ற கட்சிகளுக்கு கூட கடந்த முறை இருந்ததை விட அதிகமான எம்.எல்.ஏக்கள் தற்போது உள்ளனர்,” என்று அவர் கூறினார். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் பாஜக வெற்றியை பார்த்து சோர்ந்து போக வேண்டாம் என அவர் கூறியிருந்தார். காங்கிரஸ் விரும்பும் பட்சத்தில் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என மம்தா அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mamata Banerjee to meet Sonia Gandhi, other opposition during her Delhi  visit end July
குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மூலம் மறைமுகமாக நடத்தப்படுகின்றன. மாநில சட்டமன்றங்களில் இருந்து ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளின் எண்ணிக்கையும் மதிப்பும் 1971 ஆம் ஆண்டு மாநிலத்தின் மக்கள்தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு சூத்திரத்தால் உருவாக்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.