ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டம் – மத்திய அரசு தகவல்

ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து வரும் 27-ஆம் தேதி முதல் வழக்கமான விமான சேவைகளை மீண்டும் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் அடிப்படையில் வழங்கப்பட்ட இ- சுற்றுலா விசாக்கள் மீண்டும் நடைமுறைக்கு வருவதாகவும், புதிதாக இ-சுற்றுலா விசாக்கள் பெற வெளிநாட்டு பயணிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு வழாங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.