நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களே நெல்சன்னா..?: கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள்..!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘
பீஸ்ட்
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. ஏப்ரலில் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் எதையும் படக்குழு ஆரம்பிக்காததால் கடும் அப்செட்டில் இருக்கின்றனர்
விஜய்
ரசிகர்கள்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார்
நெல்சன் திலீப்குமார்
.
சன் பிக்சர்ஸ்
தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான ‘பீஸ்ட்’ படத்தி பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. அதனை தொடர்ந்து அனிருத் இசையில் விஜய் குரலில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

இதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா..?: கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு..!

இந்நிலையில் அடுத்த மாதம் 13 ஆம் தேதி ‘பீஸ்ட்’ படம் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா காரணமாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இந்தப்படத்தின் டீசர், டிரெய்லர் எதுவும் இன்னமும் வெளியாகததால் கடும் அப்செட்டில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘
கே.ஜி.எஃப் 2
‘ டிரெய்லரை பாராட்டி இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவுக்கு கீழ் விஜய் ரசிகர்கள் பலரும் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்டா, ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு வாழ்த்து போஸ்ட் போடுறீங்களே என கண்டமேனிக்கு கமெண்ட் பண்ணி வருகின்றனர். ‘கே.ஜி.எஃப் 2’ படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BEAST VS KGF2 : யார் படம் ஓடும்?

அடுத்த செய்திஇதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா..?: கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.