மட்டக்களப்பில் டெங்கு: நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு  

மட்டக்களப்பு மாவட்டத்தில் ,டெங்குநோய் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

கடந்த மார்ச் 12 ஆந் திகதி தொடக்கம் மார்ச்சு 18 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்குநோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு, வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் ,சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு , பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் பொது மக்ளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான 13 நோயாளர்களும், ஏறாவூர், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இரு நோயாளர்களும், செங்கலடி, காத்தான்குடி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக மொத்தம் 20 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்புமாவட்டத்தில் இவ் வருடத்தில்; இதுவரை 165 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற் குட்பட்டுள்ளதாக பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தெரிவித்தார்.

Media Unit, – Batticaloa

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.