2021 உயர்தரப் பரீட்சை: நடன, சங்கீத பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நாளை ஆரம்பம்

2021கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடன மற்றும் சங்கீத பாடத்துக்குரிய செயன்முறைப் பரீட்சை நாளை (29) முதல் ஆரம்பமர்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை ஏப்ரல் 8ம் திகதி வரை இடம்பெறும்.

உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பம், பொருளியல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், நாடகம் மற்றும் போன்ற பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் இடம்பெறும்.

நாளை ஆரம்பமாகும் செயன்முறைப் பரீட்சைக்காக மாத்திரம் அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அனுமதிப்பத்திரம் கிடைக்கப் பெறாதவர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்

WWW.doenets.lk my;yJ onlineexams.gov.lk/onlineapps  உத்தியோகபூர்வ இணையத்தில்   அனுமதிப்பத்திரத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.