மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மம்தா – செம 'ஷாக்'கில் பாஜக!

பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். பாஜகவை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன். ஒரு ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாட்டிற்குத் தேவையான தகுதியான அரசாங்கத்திற்கு வழிவகை செய்யும் ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்ப்பு எதிர்க்கட்சிகளிடம் வேண்டும். முன்னோக்கி செல்வதற்கான பாதையில் ஆலோசனை மேற்கொள்ள, ஒரு கூட்டத்திற்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். நம் ஒவ்வொருவரின் வசதி மற்றும் பொருத்தத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஓர் பொதுவான இடத்தில் ஒரு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்.

அடக்குமுறை பாஜக ஆட்சியை எதிர்த்துப் போராட அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்க்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்போடு செயல்படுவோம்.

நாட்டில் தேர்தல்கள் வரும்போது, அரசியல் எதிரிகளை குறிவைக்க
மத்திய பாஜக
அரசாங்கம் மத்திய அமைப்புகளைப் பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. அமலாக்கத் துறை, சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள அரசியல் எதிரிகளை குறிவைக்கவும், துன்புறுத்தவும், பழிவாங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் மீதான ஆளும் பாஜகவின் நேரடி தாக்குதல்கள் ஆழ்ந்த கவலையை தருகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின்
, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு, இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அடுத்த செய்திபொதுத் தேர்வை புறக்கணித்த மாணவிகள்: 21 ஆயிரம் பேர் ஆப்செண்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.