வொய்ஃப் மாசமானா ஒரு கார்… குழந்தை பிறந்தா இன்னொரு கார்… இதுவரை 4 கார்… அசத்தும் ஆல்யா தம்பதி

மகன் பிறந்தவுடன் வேறு ஒரு புதிய காரை ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதி வாங்கியுள்ளதாக தெரிகிறது.

ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளானவர்கள் ஆல்யா மானசாவும் சஞ்சீவும். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இருவரும் காதலித்தினர்.

இதையடுத்து இவர்கள் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து ஆல்யா மானசா சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

சஞ்சீவும் ஆல்யாவும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களாம். இதனால் பல கார்களை வாங்கி குவிக்க தொடங்கியதாக தகவல்கள் வந்தனர்.

ஐலா எனும் பெண் குழந்தை பிறப்பதற்கு முன்னர் அதாவது 2020 ஆம் ஆண்டு ஒரு பென்ஸ் காரை சஞ்சீவ் வாங்கியிருந்தார். பின்னர் தனது மகளின் முதல் பிறந்தநாளின் போது ஒரு சொகுசு காரை வாங்கி பரிசாக கொடுத்தார்.

இதையடுத்து மூன்றாவதாக ஒரு புதிய காரை வாங்கினார் ஆல்யா. கியா கார்னிவல் லிமோசின் காரை அவர்கள் வாங்கியிருந்தனர்.

அதன் விலை ரூ 40 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆல்யாவை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பேர் பின்தொடர்வை கொண்டாடும் விதமாக சஞ்சீவ் 3 மில்லியன் அதாவது ரூ 30 லட்சத்தில் ஒரு கூபர் காரை வாங்கி ஆல்யாவுக்கு பரிசளித்தார்.

பின்னர் ஆல்யாவுக்கு ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. இதையடுத்து அந்த வாய்ப்பை ஏற்றார்.

இந்த நிலையில் இரண்டாவதாக ஆல்யா கர்ப்பமானார். இதனால் அவர் ராஜா ராணி 2ஆம் பாகத்திலிருந்து விலகினார்.

இந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயரிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சஞ்சீவி ஏற்கெனவே வைத்திருந்த மெர்சிடிஸ் சி கிளாஸ் எனும் காரை தனது சகோதரருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

ரூ.4 கோடி சம்பள பாக்கி; தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் ஐகோர்ட்டில் வழக்கு

அதே போல் அண்மையில் வாங்கிய கூபர் காரை விற்றுவிட்டனராம். தற்போது மகன் பிறந்த நிலையில் புதிதாக ஒரு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது 2019, 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் புதிய கார்களை ஆல்யா ஜோடி வாங்கியுள்ளனராம்.
வொய்ஃப் மாசமானா ஒரு கார், குழந்தை பிறந்தா இன்னொரு கார் என இதுவரை 4 கார்களை வாங்கி ஆல்யா தம்பதி அசத்தியிருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.