சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் லக்னோ அணி முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் 7வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடிப்பாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது முக்கியமானது: பிரிட்டன் வெளியுறவு மந்திரி பேட்டி

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள  பிரிட்டன் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ், தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது முன்பை விட முக்கியமானது. உக்ரைன் நெருக்கடி உலக அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அது எடுத்துக் காட்டுகிறது. ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவது மிகவும் … Read more

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு திருப்பதியில் 8ம் தேதி முதல் சிறப்பு தரிசன டோக்கன்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்பட இருந்த சிறப்பு தரிசன டோக்கன்கள் வரும் 8ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு வரிசையில் அனுமதிக்க டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான … Read more

சென்னை: கண்டெய்னர் லாரி மோதி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தாம்பரம் – மதுரவாயல் பைபாசில், இருசக்கர வாகனம் மீது, கண்டெய்னர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அக்பர். இவரது மகன் முகமது யாசிம்( 21). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி முடிந்து, தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், முகமது யாசிம் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ், மதுரவாயல் … Read more

மாஸ்க் கட்டாயமில்லை மஹா., அரசு அறிவ।ிப்பு| Dinamalar

மும்பை,-மஹாராஷ்டிராவில், கட்டாய முக கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில், கொரோனா பரவலின் போது, மாநிலம் கடும் பாதிப்புகளை சந்தித்தது. குறிப்பாக மும்பையில் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் நேற்று முன் தினம் 119 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இருவர் உயிரிழந்தனர். தற்போது 939 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் … Read more

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நிறைவு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. அனிருத் இசையமைத்து வருகிறார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், பிரபு, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் … Read more

உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்,-உக்ரைனின் மரியுபோல் நகரில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, அங்குள்ள மக்களை மீட்டு வர, 45 பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, … Read more

வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தல்; கேரள வாலிபர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மலப்புரம் மாவட்ட எஸ்.பி. சுஜித்தாசுக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் கரிப்பூர் போலீசார் விமான நிலையத்திற்கு வெளியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகவே … Read more

20 ஓவர் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை..!!

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய சென்னை அணி வீரர்கள் … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை – இம்ரான்கான் திட்டவட்டம்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு … Read more