பல்வேறு துறைகளுக்கு மேலும் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு…

வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இன்று, (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby),  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி … Read more

சீனாவில் கோவிட்-19 தொற்று அதிகரிப்பு… இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

சீனாவின் சர்வதேச நிதி மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமான ஷாங்காய் நகரத்தின் பாதி பகுதிக்கு பொதுமுடக்கம் விதித்துள்ளது. ஷாங்காயில் தொற்று எண்ணிக்கை எவ்வளவு? தொற்று நோய் பரவல் தடுப்பில் அந்நாட்டின் தீவிர உத்தி தோல்வியடைந்ததா? சீனாவின் நிலைமை இந்தியாவுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா? கோவிட் -19 தொற்றுநோய் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான அந்நாட்டின் சமீபத்திய முயற்சியில், சீனா அதன் நிதி மூலதனம் மற்றும் சர்வதேச நிதி மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமான ஷாங்காய் நகரத்தின் பாதி அளவுக்கு கடுமையான … Read more

கொடி காத்த குமரன் எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்- சத்குரு வெளியிட்ட வீடியோ.!

சத்குரு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள்ள வீடியோவில், “திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி முதலியார் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.  இந்திய நாட்டின் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைய ஆரம்பித்த காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்போராட்டங்களில் ஆர்வத்துடன் திருப்பூர் குமரன் பங்கேற்றார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தி தொடர்ந்து மக்களை திருப்பூர் குமரன் கவர்ந்து கொண்டு இருந்தார்.  இதில் காந்தி … Read more

LSG vs CSK: பேட்டிங் ஆர்டர், பிளேயிங் லெவன் மாறினது ஓகே! ஆனா பௌலர்களின் மைண்ட்செட்? மீழுமா சிஎஸ்கே?

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும், பவர்பிளே ஓவரில் வரும் ரன்களும்தான் ஒரு அணியின் கை போட்டியின் தொடக்கத்திலேயே ஓங்குவதை உறுதிசெய்யும். சிஎஸ்கேயின் கடந்தாண்டு வெற்றி மந்திரமும் இதுதான். இந்த சீசனில் கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் கெய்க்வாட்டின் சறுக்கல், திணறிய கான்வேயின் செயல்பாடுகள், 2020 நினைவுகளை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சிஎஸ்கே குழுமத்திற்கே ஓடவிட்டிருக்கும். சுதாரித்துக் கொண்ட சிஎஸ்கே, இம்முறை ஓப்பனிங் ஸ்லாட்டை உத்தப்பாவைக் கொண்டு நிரப்பியது. உத்தப்பா | LSG vs CSK ராஜஸ்தான், கேகேஆர் என பல அணிகளுக்காக … Read more

கிராமங்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் துவங்கப்படுகிறது – அமைச்சர்

கிராமங்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை அடுத்த வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமங்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தின் கீழ் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் 70கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் பணியில் இருப்பர் எனவும் கூறினார Source link

10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தனது … Read more

நாளைக்கு படம் ரிலீஸ்… இன்னைக்கு டைட்டில் பிரச்சனை… சிக்கலில் மன்மத லீலை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் மன்மத லீலை . பக்கா அடல்ட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளர். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. உண்மைகளை மறைக்கிறார் சிவகார்த்திகேயன்… அவரால் எனக்கு ரூ. 20 கோடி நஷ்டம்… ஞானவேல் பரபர! 1976 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட … Read more

வெடித்தது போராட்டம்! – முக்கிய அமைச்சர் ஒருவரின் வீடும் முற்றுகை?

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது இராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உடன் அமுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, வர்த்தக அமைச்சர் பந்துல … Read more

இலங்கையில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி இல்லம்! கடும் பதற்ற நிலை; பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பொலிஸார் பிரயோகித்துள்ளனர். தீவிரமடையும் போராட்டம்! கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்த பொலிஸார் இலங்கையில் கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் தற்போது அதனை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் தற்போது மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் … Read more

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு ஏப்ரல் 15 வரை நீடிப்பு

புதுடெல்லி: சிறப்பு உறுப்பினர் இயக்கத்தை நீடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய உறுப்பினர் சேர்க்கைக்கான மார்ச் 31 காலக்கெடுவை ஏப்ரல் 15 வரை நீட்டித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மற்றும் உடல் பயன்முறையில் மார்ச் 31 வரை தொடர இருந்தது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. … Read more