ஆயுதங்கள் பற்றாக்குறை… உக்ரைன் முடிவால் ரஷ்ய இராணுவத்தில் நெருக்கடி


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தற்போது உக்ரைன் காரணமாகவே திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ தளவாடங்களுக்கு உதிரி பாகங்களில் பெரும்பாலானவை உக்ரைனிலே தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது போரை முன்னெடுத்து செல்ல போதுமான ஆயுதங்களை குவிக்க, ரஷ்யாவால் முடியாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உக்ரைன் துருப்புகள் துணிச்சலாக போரிட்டு, ரஷ்ய துருப்புகளை தலைநகர் கீவ்வுக்கு வெளியே துரத்தியுள்ள நிலையிலேயே ரஷ்யாவின் இந்த சிக்கல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை, ரஷ்ய இராணுவத்திற்கு தேவையான க்ரூயிஸ் ஏவுகணைகள், ஹெலிகொப்டர் எஞ்சின் பாகங்கள் மற்றும் போர் ஜெட் விமான பாகங்கள் என அனைத்தும் உக்ரைனில் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

மட்டுமின்றி இராணுவ டாங்கிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரி பாகங்களும் உக்ரைன் தயாரிப்பையே ரஷ்யா பயன்படுத்தி வந்துள்ளது.
தற்போது, இந்த உதிரி பாகங்கள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்படாத நிலையில், ரஷ்ய இராணுவம் திணறி வருவதாக கூரப்படுகிறது.

மட்டுமின்றி, பொருளாதார தடைகள் அமுலில் இருப்பதால், வேறு நாடுகளில் இருந்தும் தேவையான உதிரி பாகங்களை பெற முடியாமல் போயுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது படையெடுப்பை துவங்கிய பின்னர் இதுவரை 143 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள், 625 டாங்கிகள், 316 பீரங்கிகள் என ரஷ்யா இழந்துள்ளது.

ரஷ்யா இதுவரை குறைந்தது 1,100 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது, ஆனால் அத்தகைய செலவினத்தை எவ்வளவு காலம் பராமரிக்க முடியும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் ரஷ்யா கடுமையான சிக்கலில் தள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி, இனி எதிர்காலத்திலும் உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு உதிரி பாகங்கள் செல்லாது என்றே தற்போதைய சூழல் உணர்த்துவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

ரஷ்யாவால் அந்த உதிரி பாகங்களை தயாரிக்கவோ, தற்போதைய சூழலில் இறக்குமதி செய்யவோ முடியாது.
சோவியத் ஒன்றிய காலகட்டத்தில், ஒன்றியத்தின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களில் 30 சதவீதத்தை உக்ரைன் உற்பத்தி செய்தது.

மட்டுமின்றி, 2012 முதல் உலகின் நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உக்ரைன் இருந்து வருகிறது.
2014ல் கிரிமியா பகுதியில் ரஷ்யா ஊடுருவிய பின்னர் அண்டை நாடுகளுக்கு உதிரி பாகங்களை விநியோகிப்பதை உக்ரைன் கட்டுப்படுத்தியது.

2012ல் ஆயுத ஏற்றுமதியால் 1 பில்லியன் பவுண்டுகளுக்கு வருவாய் ஈட்டிய உக்ரைன், 2020ல் 100 மில்லியன் பவுண்டுகள் என சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.