கொரோனாவே இன்னும் முடியல, அடுத்து இதுவாம்: WHO கொடுத்த பகீர் தகவல்

வாஷிங்டன்: கொரோனா தொற்று உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இதனால் உலகெங்கிலும் ஏராளமான உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், சில பகுதிகளில் இன்னும் புதிய கொரோனா தொற்று பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில், மக்கள் மற்றொரு தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.

பூச்சிகள் மூலம் தொற்றுநோய் பரவலாம்

எங்கள் கூட்டாளர் வலைத்தளமான வியானின் அறிக்கையின்படி, உலகம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்த தொற்றுநோய் பூச்சியால் பரவும் நோய்களால் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. டெய்லி மெயில் நாளிதழில் வெளியான செய்தியில், பூச்சிகள் உலகம் முழுவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பூச்சிகள் மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளன. மஞ்சள் காய்ச்சல், ஜிகா, சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற ஆர்போவைரஸ்கள் கொசுக்கள் மற்றும் உண்ணிகள் போன்ற ஆர்த்ரோபாட்களால் பரவுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இவற்றால் அடுத்த தொற்றுநோய் வரக்கூடும்.

நிபுணர்கள் செயலுத்தியை உருவாக்குகிறார்கள்

இந்த பூச்சிகள் பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் செழித்து வளர்கின்றன. அங்கு சுமார் நான்கு பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இப்போது வல்லுநர்கள் தொற்றுநோயைத் தடுக்க ஒரு செயலுத்தியை வகுக்க முயற்சிக்கின்றனர். 

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய தொற்று அபாயத் தயார்நிலைக் குழுவின் இயக்குநர் டாக்டர் சில்வி பிரையாண்ட், கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு வருகிறோம். இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த கோவிட் தொற்றுநோயின்போது அறிந்து கொண்டோம் என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க | COVID 19 4th Wave: சுனாமியாய் சுழற்றியடிக்குமா கொரோனாவின் நான்காவது அலை? அச்சத்திற்கு ஆதாரம் உண்டா? 

சார்ஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவின் அனுபவம்

2003 இல் சார்ஸ் மற்றும் 2009 இல் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் அனுபவம் நம்மிடம் இருந்தது என்று அவர் கூறினார். அதே சமயம், பூச்சிகளால் ஏற்படும் புதிய ஆர்போவைரஸ் காரணமாக, அடுத்த தொற்றுநோய் ஏற்படுமா என்ற அச்சம் நிலவுகிறது. 2016 முதல், 89 க்கும் மேற்பட்ட நாடுகள் ஜிகா வைரஸ் வெடிப்பை எதிர்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மஞ்சள் காய்ச்சல் ஆபத்து அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் 130 நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 390 மில்லியன் மக்களை பாதிக்கிறது. 

மறு மதிப்பீடு தேவை

உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத் தலைவர் டாக்டர் மைக் ரியான், இந்த நோய்களில் ஒவ்வொன்றையும் கண்காணித்து ஆராய்ச்சி செய்ததால் பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறினார். இருப்பினும், நாம் இன்னும் இவற்றை குறித்து மறு மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | சீனாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா: பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.