மகளை காரணம் காட்டி பணம் பறிப்பு: மனைவி மீது தாடி பாலாஜி பகீர் குற்றச்சாட்டு..!

பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு எலிமினேட் ஆகியுள்ளவர் தாடி பாலாஜி. இவரும், இவரது மனைவி நித்யாவும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் இருந்தது. பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை
தாடி பாலாஜி
தனியாகவும்,
நித்யா
தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சனை வெடித்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பாலாஜி மீது நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். நித்யாவின் இந்த குற்றச்சாட்டை பாலாஜி மறுத்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போது தாடி பாலாஜி தன்னுடைய கேரக்டரை அவர் ரொம்பவே கேவலப்படுத்துவதாக கூறியிருந்தார் நித்யா. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது மகளுடன் வந்து பேசினார் அதில், பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்கப்படுத்தி கொண்டிருக்கிறார். இனிமேலும் என்னை பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகள், மனைவி நித்யாவின் தவறான வழிகாட்டுதலால் சமூக வலைதளத்தில் காணொலி பதிவிடுவதாகவும், இதனால் அவரது படிப்பு பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ள தாடி பாலாஜி, நித்யாவை பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால் என் மகளின் வாழ்க்கை வீணாவதை தன்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் மகளை, மனைவி நித்யாவிடமிருந்து மீட்டு தருமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்..!

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும், மகள் போஷிகா மனைவி பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார் சமீபகாலமாக மகளை பள்ளிக்கு சரியாக போக விடாமலும் தவறான வழிகாட்டுதலால் தன் மகளை மிரட்டி தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் மனைவி நித்யா ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் மகளின் எதிர்காலத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேச வைப்பதாகவும் தெரிவித்தார். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் போட்ட ஒரு ட்வீட்.. தலைவருக்கா? தளபதிக்கா?

அடுத்த செய்திபல தடைகளை தாண்டி வெளியான மன்மதலீலை..படம் எப்படி இருக்கு தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.