வட்டி விகித அதிகரிப்பு எப்போது..GDP 7.4% ஆக வளர்ச்சி காணலாம்..FICCI பலே கணிப்பு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் 7.4% ஆக வளர்ச்சி காணலாம் என ஃபிக்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வறிக்கையானது குறைந்தபட்சம் 6% ஆகவும், அதிகபட்சமாக 7.8% ஆகவும் வளர்ச்சி விகிதம் இருக்கலாம் என கணித்துள்ளது.

இது தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் விலைவாசியானது எகிறி வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.

டிசம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4% மட்டுமே.. ஒமிக்ரான் எதிரொலி..!

துறை வாரியாக வளர்ச்சி

துறை வாரியாக வளர்ச்சி

நடப்பு நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான சராசரி வளர்ச்சி விகிதம் 3.3 சதவீதாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. தொழில் மற்றும் சேவை முறையே 5.9 சதவீதம் மற்றும் 8.5 சதவீதமாக வளர்ச்சி காணலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டி விகித அதிகரிப்பு எப்போது?

வட்டி விகித அதிகரிப்பு எப்போது?

இதற்கிடையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வட்டி விகித உயர்வானது இருக்கலாம். இந்த வட்டி விகித அதிகரிப்பானது 50 – 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஏப்ரல் மாத ஆய்வுக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி ஆதரவளிக்கும் விதமாக வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரியவும் வாய்ப்பிருக்கு
 

சரியவும் வாய்ப்பிருக்கு

எனினும் வளர்ச்சி விகிதங்கள் சரிவதற்கான காரணிகளும் அதிகரித்து வருவதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. கொரோனாவின் தாக்கம் இன்னும் சில நாடுகளில் இருந்து கொண்டுள்ள நிலையில், ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையும் முடிவுக்கு வராமல் சவாலான ஒரு விஷயமாக உள்ளது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

வீழ்ச்சி காணலாம்

வீழ்ச்சி காணலாம்

தற்போது சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கமாடிட்டி பொருட்களின் விலையானது, நீண்டகாலத்திற்கு நீடித்தால் இன்னும் பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை, இயற்கை எரிவாயு விலை, உணவு, உரங்கள் மற்றும் உலோகங்கள் விலை என பல முக்கிய மூலப் பொருட்களின் விலையும் அதிகரித்தால் அது வணிகத்தினை பாதிக்கலாம்.

சராசரி பணவீக்க விகிதம்

சராசரி பணவீக்க விகிதம்

நடப்பு நிதியாண்டில் சராசரி பணவீக்க விகிதம் 5.3% ஆக இருக்கலாம். இது 5.3 மற்றும் 5.0 மற்றும் 5.7 சதவீதம் வரையில் ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இது இந்தியா கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்து வருவதால், சர்வதேச சந்தையின் எதிரொலி இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலிக்க கூடும். மொத்தத்தில் இதன் தாக்கம் தீவிரமாக இருக்க கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s GDP estimated to grow at 7.4% in current financial year: FICCI says

India’s GDP estimated to grow at 7.4% in current financial year: FICCI says/வட்டி விகித அதிகரிப்பு எப்போது..GDP 7.4% ஆக வளர்ச்சி காணலாம்..FICCI பலே கணிப்பு!

Story first published: Sunday, April 3, 2022, 22:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.