இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு!

இலங்கையில் அமைச்சரவை ராஜினாமா செய்த நிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது.

மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின் வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கினார். இதனையடுத்து அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டார்.

வீழ்ச்சி அடைந்த இலங்கை.. பரிதவிக்கும் மக்கள்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை!

இதை அடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்கப்பட்டு அமைச்சர்கள் பதவிகளை ஏற்று நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிபர் கோத்தய ராஜபக்சே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து, அதிபர் கோத்தய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வித் துறை அமைச்சராக தினேஷ் குணவர்தனயும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பதவி ஏற்றுள்ளனர்.

அடுத்த செய்திஅமைச்சர்கள் ராஜினாமா: அதிரடி முடிவால் பரபரப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.