தனுஷின் போக்கை மாற்றிய அந்த தருணம்..மீண்டும் நடக்குமா ?

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். முதல் படத்திலேயே கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான
தனுஷ்
தொடர்ந்து தன் முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாக அவர் நடிப்பில் இரண்டாவது படமாக வெளிவந்த
காதல் கொண்டேன்
திரைப்படம் மெகாஹிட்டானது.

செல்வரகானின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் காதல் கொண்டேன். இப்படம் வெளியான அன்று ஒரே நாளில் தனுஷின் வாழ்க்கை மாறிவிட்டதாக தனுஷே பல முறை பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அப்படம் வெளியான பிறகு தனுஷிற்கு கிடைத்த விமர்சனங்களெல்லாம் பாராட்டுகளாக மாறின.

இதுக்கெல்லாம் அது மட்டும்தான் காரணம் : சமந்தா

அதையடுத்து திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன் போன்ற படங்களின் வெற்றி தனுஷை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இருப்பினும் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த யாரடி நீ மோஹினி என்ற திரைப்படம் தனுஷ் திரைவாழ்க்கையில் மிகமுக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ஏனென்றால் அதுவரை தனுஷ் நடித்த படங்கள் இளைஞர்களையே வெகுவாக ஈர்த்தது. ஆனால் யாரடி நீ மோஹினி திரைப்படம் இளைஞர்கள் உட்பட குடும்ப ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. இப்படத்தின் மூலம் தனுஷிற்கு ஏராளமான பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் கூடினார்கள்.

தனுஷ்

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர்
மித்ரன் ஜவஹர்
இப்படத்தைப்பற்றிய ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது இப்படம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 14 ஆண்டு ஆகிவிட்டதை கொண்டாடும் வகையில் மித்ரன் ஜவஹர் இந்த பதிவை போட்டுள்ளார்.

யாரடி நீ மோஹினி

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தையும் மித்ரன் தான் இயக்கிவருகின்றார் என்பதால் ரசிகர்கள் அவரிடம் அப்படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

தனுஷ் தற்போது தன் திரைவாழ்க்கையில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது மித்ரன் மீண்டும் தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கியுள்ளார். எனவே மீண்டும் யாரடி நீ மோஹினி படத்தைப்போன்று ஒரு வெற்றி படம் தனுஷிற்கு அமையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

அடுத்த செய்திமாஜி மனைவிக்கு எதிராக டி. இமான் பரபரப்பு புகார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.