நம்ம ஊரு டாடாவின் புதிய 'Neu' சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!

இந்தியாவில் டிஜிட்டல் தளங்கள் அபார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சாலையோர வியாபாரம் முதல் ஆடம்பர தொழில்கள் வரை தற்போது டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது UPI பணப் பரிவர்த்தனை முறை என்று சொன்னால் அதற்கு மாற்றிக்கருத்து இருக்க முடியாது.

ரூ.1-இல் தொடங்கி லட்சக்கணக்கிலான பணப் பரிவர்த்தனை வரை இந்த சேவை மூலம் பயனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதை உணர்ந்து கொண்ட உள்நாட்டின் மிகப்பெரும் மரியாதைக்குரிய நிறுவனமான ‘
Tata Group
‘ புதிய யுபிஐ சேவையைத் தொடங்க உள்ளது.

இதற்கான முன்னோட்டங்களை நிறுவனம் தற்போது சோதித்து வருகிறது. யுபிஐ பேமென்ட் மட்டுமில்லாமல், ஒருங்கிணைந்த பல சேவைகளை நிறுவனம் ஒரே செயலியின் மூலம் பயனர்களுக்கு வழங்க உள்ளது. அதாவது, Paytm போன்று ஒரே செயலியில் பல சேவைகளை நிறுவனம் அளிக்க திட்டமிட்டுள்ளது.

டாடா நியூ ஆப் அம்சங்கள்

இந்தியாவில் இதே துறையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களான பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே போன்ற செயலிகளுடன் நேரடியாக டாடா நியூ செயலி போட்டியிடும். மேலும், சலுகைகளை பெற நியூ காயின்ஸ் ‘
Neu Coins
‘ ரிடீம் அம்சமும் இந்த செயலியின் வாயிலாக அறிமுகம் செய்யவுள்ளது டாடா.

டாடா நியூ
ஆப் வெளியீடு குறித்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல் மளிகைப் பொருள்களை ஆர்டர் செய்வது வரை அனைத்து சேவைகளையும் நியூ ஆப்பில் அனுபவிக்கலாம். ஒன் ஸ்டாப் ஷாப் ஆக இந்த ஆப் செயல்படும்.

காசே இல்லாம IRCTC ரயில் டிக்கெட்! பேடிஎம் அதிரடி!

டாடா குழுமத்தின் டிஜிட்டல் சேவைகளான ஏர் ஏசியா, ஏர் இந்தியா ஆகியவற்றில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் அல்லது தாஜ் குழுமத்தில் உள்ள ஹோட்டல்களை முன்பதிவு செய்தல், பிக்பாஸ்கெட்டில் இருந்து மளிகைப் பொருள்களை ஆர்டர் செய்தல், 1mg இலிருந்து மருந்துகள், குரோமாவில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வெஸ்ட்சைடில் இருந்து ஆடைகள் வாங்குதல் போன்ற அனைத்தும்
Tata Neu
செயலியில் நிறுவப்படும்,” என்று தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் போன்று, பல துறைகளில் கோலோச்சி வரும் டாடா நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு, டிஜிட்டல் சேவை அளித்து வரும் நிறுவனங்களுக்கு கூடுதல் நெருக்கடியை தரும். முக்கியமாக, ரிலையன்ஸ் சேவைகளை தரும் ஜியோ டிஜிட்டல் தளத்திற்கும் இது கடும் போட்டியாக இருக்கும்.

நியூ காயின் என்றால் என்ன
ஒவ்வொரு யுபிஐ சேவை நிறுவனங்களும், பயனர்களுக்கு கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வாரி இறைக்கின்றன. இதே போன்ற வெகுமதிகளை பயனர்களுக்கு வழங்க தான் டாடா ‘நியூ காயின்ஸ்’ அம்சத்தினை டாடா நியூ செயலியில் சேர்த்துள்ளது. பயனர்களின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நியூ காயின்ஸ் வாயிலாக வெகுமதிகள் வழங்கப்படும்.

இந்த காயின்ஸை கொண்டு அடுத்த பரிவர்த்தனைக்கு கூடுதல் சலுகைகளை பயனாளர்கள் பெற முடியும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த சேவையை வழங்கும் டாடா நிறுவனம், நுகர்வோர் மனநிலையை கருத்திற்கொண்டு அவர்களை தங்கள் வசம் தக்கவைத்துக்கொள்ள எடுத்திருக்கும் இந்த முயற்சி நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. 7 ஏப்ரல் 2022 முதல் பயனர்களுக்காக டாடா நியூ ஆப் தனது சேவையைத் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலதிக செய்திகள்
:

இனி சிம் கார்டு தேவையில்லை – Android 13 கொண்டுவரும் புதிய அம்சம்!ஷூவில் கேமரா; போன் சார்ஜர் – Ixigo அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஷூஸ்!ரூ.399க்கு அதிவேக ஃபைபர் இன்டர்நெட் – சூப்பர் ஆஃபர்களுடன் டாடா டெலி பிராட்பேண்ட்!

அடுத்த செய்திஉனக்கு நான் சளைச்சவன் இல்ல – 2 திட்டங்களை அறிமுகம் செய்த விஐ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.