பொண்ணு ரெடி…! அடுத்து திருமணம் ஆக போகும் பிரபல நடிகை…! குவியும் வாழ்த்து…!

நடிகை
ஆத்மிகா
தனது ட்விட்டர் பக்கத்தில் பிரைடல் லுக்கில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து ட்வீட் செய்துள்ள நிலையில்,
ரசிகர்கள்
அவருக்கு திருமண வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான
கோடியில் ஒருவன்
திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.கடந்த 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா
ஆதி
இயக்கி நடித்த
மீசையை முறுக்கு
படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த “வாடி புள்ள வாடி” உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே வேற லெவல்
ஹிட்
அடித்தன. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும், 4 ஆண்டுகள் கழித்துத் தான் ஆத்மிகாவின் அடுத்த படமே ரிலீசானது.

நினைத்ததை செய்து காட்டும் சிவகார்த்திகேயன்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!

கடந்த ஆண்டு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஆத்மிகா. மீசையை முறுக்கு திரைப்படத்திற்கு பிறகு கோடியில் ஒருவன் திரைப்படம் ஆத்மிகாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

இயக்குநர்
கார்த்திக் நரேன்
இயக்கத்தில் ஆத்மிகா நடித்த நரகாசூரன் திரைப்படம் 4 ஆண்டுகளுக்கும் மேல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. மேலும், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகாமல் அப்படியே தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக பெரிய பேனர் படங்கள் என்றால் மட்டுமே தற்போது ஓகே சொல்லி வருகிறாராம் ஆத்மிகா

பல ஆண்டுகளாக சினிமா பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும், நடித்த படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் நடிகை ஆத்மிகா சோர்ந்து போய் விடவில்லை. ரசிகர்களுடன் எப்போதுமே ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார். அவர் வெளியிடும் கவர்ச்சி படங்கள், க்யூட்டான புகைப்படங்கள் என அனைத்துமே லைக்குகளை அள்ளி டிரெண்டாகி வருகின்றன.

29 வயதாகும் நடிகை ஆத்மிகாவுக்கு புதிதாக படங்கள் ஏதும் கைவசம் இல்லாத நிலையில், திடீரென திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அவரது லேட்டஸ்ட் ட்வீட்டை பார்த்ததும் எழுந்துள்ளது. பல ரசிகர்கள் ஆத்மிகாவின் அந்த போஸ்ட்டை பார்த்து திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மணப்பெண் கோலத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள நடிகை ஆத்மிகா “பொண்ணு ரெடி” என போட்டுள்ள கேப்ஷன் தான் இப்படியொரு கேள்வி எழ காரணமாக அமைந்துள்ளது. ஆத்மிகாவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், மாப்பிள்ளையும் ரெடி என தாறுமாறாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டு செம அழகாக இருக்கும் ஆத்மிகாவை பார்த்து ரசிகர்கள் வித விதமாக வர்ணித்து போஸ்ட்டுகளை கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி இப்படி போட்டு ஏமாத்திருக்கலாமே என்றும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், ஆத்மிகா சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படியொரு ட்வீட் போட்டுள்ளார் என்றும் அவர் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

அடுத்த செய்திஅந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு நோ சொன்ன ராம்சரண்…! எதற்கு தெரியுமா…?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.