போலந்து- பெலாரஸ் எல்லையில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் டிரக்குகள் அணிவகுத்து நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக எல்லைக் கட்டுப்பாடுகள், போக்குவரத்து சோதனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டிரக்குகள் செல்வதில் தாமதம் என கூறப்படுகிறது.
போலந்து, பெலாரஸ் இடையில் வணிக சேவையில் ஈடுபட்டுள்ள டிரக் டிரைவர்கள் 2 நாட்களாக எல்லையை கடக்க முடியாமல் காத்து இருப்பதாக தெரிவித்தனர். ஏறத்தாழ ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட டிரக்குகள் எல்லை அனுமதிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.