இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை ஆண்டுக்கு ரூ. 1.88 இலட்சம் கோடி அளவுக்கு வணிகத்தைக் கொண்டுள்ளது – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் சேவைத் தளத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு இலட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சியடையும் எனத் தெரிவித்தார்.

ஊடகத் துறையில் தொள்ளாயிரத்துக்கு மேற்பட்ட சேட்டிலைட் தொலைக்காட்சி சேனல்களும், 350 பண்பலை சமுதாய வானொலிகள், 380 பண்பலை வானொலிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக நாடு முழுவதும் ஆயிரத்து 762 எம்எஸ்ஓக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.