முகேஷ் அம்பானிக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் டாடா நியூ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றாக இருந்து வரும் டாடா குழுமம், ஏற்கனவே உணவில் போடும் உப்பு முதல் விலையுயர்ந்த கார்கள், ஆபரணங்கள் என பல வணிகங்களிலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றது. எனினும் எதிர்காலத்தின் தேவையறிந்து தனது வணிகத்தினை டிஜிட்டல்மயமாக்கியும் வருகின்றது.

அந்த வகையில் தற்போது அம்பானியின் ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது டாடா.

டாடா குழுமம் தனது சூப்பர் செயலியான டாடா நியூவினை (TATA neu) ஏப்ரல் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆட்டத்தை ஆரம்பித்த டாடா.. இனி இந்தியாவுக்கு யோகம் தான்..!

டாடா நியூ

டாடா நியூ

இதனை கூகுள் பிளே ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எனினும் டாடா நியூ (TATA neu) ஏப்ரல் 7ல் இருந்து தனது புதிய பயணத்தினை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் இந்த சூப்பர் ஆப்பில், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் டாடா குழுமத்தின் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் சேவையையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன கிடைக்கும்?

என்னென்ன கிடைக்கும்?

இந்த சூப்பர் ஆப்பில் மளிகை சாமான்கள் முதல் கேஜேட்டுகள் வரை அனைத்தையும் TATA neu -வில் பெறலாம்.

டாடா பே- வினை பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் வாங்கும் பில்களுக்கு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல பயன்பாட்டு பில்களையும் இதன் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.

 

விமான டிக்கெட் & ஹோட்டல் புக்கிங்
 

விமான டிக்கெட் & ஹோட்டல் புக்கிங்

டாடா குழுமத்தின் ஏர் ஏசியா விமானங்களுக்காக பதிவு செய்தால் அதற்கு சில ஆஃபர்களையும் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் டாடா குழுமத்தின் தாஜ் ஹோட்டல் புக்கிங்கும் செய்து கொள்ளலாம். பிக்பாஸ்கெட்டில் இருந்து மளிகை பொருட்களும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

டாடா பே - UPI சேவை

டாடா பே – UPI சேவை

டாடா பே – UPI சேவையை பயன்படுத்தி அதன் மூலம் உங்களது நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உங்கள் மொபைல் போனில் உள்ள எந்த ஒரு நம்பருக்கும், அவரது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிக் கொள்ளலாம்.

மின்சார பில்கள், மொபைல் கட்டணங்கள், DTH, பிராட்பேண்ட் சேவை கட்டணங்கள், ரீசார்ஜ்கள் என பலவற்றையும் செலுத்திக் கொள்ளலாம்.

 

 ரிவார்டு பாயிண்ட்டுகள்

ரிவார்டு பாயிண்ட்டுகள்

தற்போது டாடா குழும ஊழியர்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் உள்ள இந்த சூப்பர் ஆப், ரிவார்டு பாயிண்ட்டுகளையும் தருகின்றது. விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் புக்கிங், மருந்துகள், மளிகை பொருட்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக இந்த சூப்பர் ஆப், நியூ காயின் என்ற வடிவில் ரீவார்டு பாயிண்ட்டுகளையும் தரும் என அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

tata new super app plans to launch on April 7; 5 things to know about the super app

tata new super app plans to launch on April 7; 5 things to know about the super app/முகேஷ் அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் டாடா நியூ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.