அய்யய்யோ…விஜய் கூட நடிக்கணுமா ? தயங்கிய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாய், வசூல் சக்ரவர்தியாய் திகழ்பவர் நடிகர்
விஜய்
. இவரின் படங்களை தயாரிக்கவும் ,இவரை இயக்கவும் பலபேர் தவம் இருந்து வருகின்றனர். இவரது படங்கள் சுமாராக இருந்தாலும் படத்தின் பட்ஜெட்டை விட இருமடங்கு வசூலை பெரும். அதே இவர் படங்கள் சூப்பராக இருந்தால் வசூலில் சாதனை படைக்கும் .

படம் எப்படி இருந்தாலும் விஜய் என்ற ஒரு நபருக்காகவே கோடான கோடி ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். அதன் காரணமாகத்தான் இவரின் கால் ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை பீஸ்ட் படத்துல விஜய் நடிக்கலனா இதுதான் நடந்திருக்கும்:நெல்சன்

மேலும் இவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டுமென இளம் நடிகர்களும், நாயகிகளும் ஆவலாக இருந்து வருகின்றனர். ஏனென்றால் விஜய் போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்துடன் நடித்தால் அவர்கள் திரைவாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டும் பலபேர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய்

இந்நிலையில் ஒருகாலத்தில் விஜய்யுடன் நடிக்க ஒரு நடிகை தயங்கியதாக தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணத்தில் இளைஞர்களை கவரும் வண்ணமே அவர் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மேலும் அவரின் முதல் சில படங்களில் நாயகிகள் கவர்ச்சியாக நடித்துவந்தனர்.

இந்த ட்ரெண்ட் பூவே உனக்காக படத்திலிருந்து மாறியது. இந்நிலையில் பிரபல நடிகை சங்கீதாவை பூவே உனக்காக படத்தில் நடிப்பதற்காக இயக்குனர்
விக்ரமன்
அணுகினர். படத்தின் ஹீரோ விஜய் என்று சொன்னவுடன்
சங்கீதா
சற்று தயங்கினாராம்.

பூவே உனக்காக

காரணம் அப்போது வந்த விஜய் படங்களில் நாயகிகள் சற்று கவர்ச்சியாகவே நடித்து வந்தனர். அதன் காரணமாகவே சங்கீத சற்று தயங்கியுள்ளார். ஆனால் விக்ரமன் படத்தின் கதையை சொல்லவே சங்கீதா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது பல வருடங்கள் கழித்து இந்த தகவல் இணையத்தில் செம வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

BEAST TEASER : ‘வெயிட்டு காட்டிரலாமா’ மாஸ் காட்டும் சன் பிக்ச்சர்ஸ்

அடுத்த செய்தி’வலிமை’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனம்: ‘ஏகே 61’ படத்தில் நிகழும் அதிரடி மாற்றம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.