ரூ. 720 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ. ,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 2019-20-ம் நிதி ஆண்டில், தேசிய கட்சியான பா.ஜ., பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூ. 720 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏ.டி.ஆர்) சார்பில், கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில் பாஜ., காங்கிரஸ்., திரிணாமுல் காங்., தேசியவாத காங்., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்கினை தாக்கல் செய்துள்ளன.

latest tamil news

அதில் கூறப்பட்டுள்ளதாவது, 2019-20 நிதியாண்டில் 2,025 கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து பா.ஜ., ரூ. 720. 47 கோடியும், காங்கிரஸ் கட்சி 154 நிறுவனங்களிடமிருந்து ரூ. 133.04 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங். கட்சி 36 நிறுவனங்களிடமிருந்து ரூ. 57.86 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.