ஸ்ரீகாந்த் – வெற்றி இணைந்து நடிக்கும் 'தீங்கிரை'

அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீங்கிரை'. சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கிறார் . பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார் . சைக்கோ க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் படத்தில் முதல்முறையாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் வெற்றி இணைந்து நடிக்கின்றனர் . கதாநாயகியாக அபூர்வா ராவ் நடிக்க இருக்கிறார் . முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்துள்ளார் . கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இப்படம், கொரோனா காரணமாக கிடப்பில் இருந்தது . இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.