விரைவில் வெளியாகும் OnePlus நார்ட் என்20 5ஜி போன் – கசிந்த தகவல்கள்!

புதிய ஸ்மார்ட்போன் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒரு புதிய 5ஜி மொபைலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு
OnePlus Nord N20 5G
எனப் பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, இது ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட் ரேஞ் மாடல் என்றாலும், இந்த போன் பல சிறந்த அம்சங்களையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, நிறுவனம் விரைவில் மூன்று புதிய Nord ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தலாம்.

இவை
OnePlus
Nord 2T, OnePlus Nord CE 2 Lite, OnePlus Nord 3 ஆக இருக்கலாம். தற்போது கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு Nord N20 5G ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்று பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸ் அப்டேட்: இனி உங்கள் பயணம் சுகமாகும்!

ஒன்பிளஸ் நார்ட் என்20 5ஜி அம்சங்கள்

OnePlus Nord N20 5G ஸ்மார்ட்போன் 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord N10 5G ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாகும். OnePlus N20 5G ஆனது 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஒரு பஞ்ச் ஹோல் உடன் வருகிறது. இந்த திரை முழு HD பிளஸ் தெளிவுத்திறனுடன் வருகிறது. அதன் ரெப்ரெஷ் ரேட் 90Hz ஹெர்ட்ஸ் வரை இருக்கலாம்.

இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கும். ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நார்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போனில் Snapdragon 695 சிப்செட் நிறுவப்படலாம். ஆண்ட்ராய்டு 12 அடிப்படையில் இயங்கும் ஆக்சிஜன் ஸ்கின் இந்த ஸ்மார்ட்போனை இயக்கலாம்.

கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, பின்பக்கத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இதில் 64MP மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. மேலும், இரண்டு 2MP மெகாபிக்சல் கேமராக்கள் கொடுக்கப்படலாம். 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பஞ்ச் ஹோலில் நிறுவப்பட்டிருக்கும்.

ஒன்பிளஸ் Vs ரியல்மி லேட்டஸ்ட் 5ஜி போன் ஒப்பீடு – இதில் எந்த மொபைல் சிறந்தது?

ஒன்பிளஸ் நார்ட் என்20 5ஜி விலை

இந்த ஸ்மார்ட்போன் 8GB ரேம், 128GB வரை ஸ்டோரேஜ் மெமரி ஆதரவை பெறலாம். போனை சக்தியூட்ட 4,500mAh பேட்டரி பயன்படுத்தப்படும். இதனை சக்தியூட்ட 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை சார்ஜருடன் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.14,999 முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போனை பயனர் சந்தைக்கு அறிமுகம் செய்தது. ரெட்மி 5ஜி போன்களை விட ஒன்பிளஸ் போனின் விலை அதிகமாக இருந்தது. எனவே இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.