LSG vs Dc LIVE score: ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் லக்னோ; டெல்லியுடன் இன்று மோதல்!

IPL 2022,  LSG vs DC LIVE score updates: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்ட அறிமுக அணி லக்னோ சென்னை, ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றியை ருசித்தது. அந்த அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி போன்றோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஜாசன் ஹோல்டர் பலம் சேர்கின்றனர்.

தொடக்க ஆட்டத்தில் மும்பையை தோற்கடித்த டெல்லி அணி குஜராத்திடம் தோல்வி கண்டது. அந்த அணிக்கு பேட்டிங், பந்துவீச்சில் வலு சேர்க்க ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் மற்றும் அதிவேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா தயாராக உள்ளதாக உதவி பயிற்சியாளர் வாட்சன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இவர்களது வருகை டெல்லி அணியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

2 தொடர் வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடவே டெல்லி அணி தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai   07 April 2022

Lucknow Super Giants 

vs

Delhi Capitals  

Match Yet To Begin ( Day – Match 15 ) Match begins at 19:30 IST (14:00 GMT)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.