அடேங்கப்பா இது நம்ம விஜய் அத்தை மகள் தானா…! ஆலே மாறிட்டாங்களே…!

சினிமாவை பொறுத்த வரை நடிகர்களை விட நடிகைகளின் சினிமா ஆயுள் மிகவும் குறைவு தான். 90ஸ் காலகட்டத்தில் நடித்த பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.ஆனால், அவர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் ஆள் அட்ரஸ்ஸே இல்லாமல் போய்விட்டனர்.

அந்த வகையில் நடிகை சிந்து மேனன் ஒருவர். தமிழில் 2001ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் சிந்து மேனன். அதன் பின்னர் தமிழில் இவர்
யூத்
படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் 2009ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் நடித்திருந்தார்.
ஆதி
நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

திருமணமான நடிகருடன் தொடர்பு: உண்மையை சொன்ன விஜய் ஹீரோயின்

இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான
விஜய்
அவார்ட்ஸ் கூட வழங்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.நடிகை சிந்து மேனன் 1985ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார்.

மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியும்.1994ஆம் ஆண்டு
ராஷ்மி
என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாறினார். அதன்பின்னர் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை செய்தார்.

பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.கடந்த 2010ஆம் ஆண்டு
டொமினிக்
பிரபு என்ற லண்டனை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கூட தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் பிறந்தனர்.

அதே போல சமீபத்தில் தான் இவருக்கு மூன்றாவது குழந்தையும் பிறந்தது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு வரை தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவரை எந்த மொழி திரைப்படத்திலும் காண முடியவில்லை. திருமணத்திற்கு பின்னர் லண்டனில் வசித்து வரும் இவர் குடும்பத்தை பார்த்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.