ஆட்டோ ஓட்டுநராக சிம்பு?
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து தற்போது வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு பத்து தல படத்திலும், அடுத்து கொரோனா குமார் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சிம்பு புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதற்காக ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் அவர் நடித்து இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ இணையத்தில் வைரலானது.