10 மாதங்களில் முடிந்தது… அனைவருக்கும் நன்றி.. மனம் திறந்த பீஸ்ட் இயக்குநர்

Beast Director Nelson Press Meet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, ரொட்டின் கிங்ஸ்லே, விடிவி கனேஷ் உள்ளிட்டோர் நடித்தள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து்ளளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீஸ்ட் படம் நாளை வெளியாக உள்ளது. இதற்காக கடந்த ஒரு வாரமாகவே ரகிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் இயக்குநர் தனது படக்குழுவுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், பீஸ்ட் படம் நன்றாக வந்துள்ளது. நாளை படம் வெளியாக உள்ளது இந்த தருணத்தில் படத்தில் என்னுடன் வேலை செய்த பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று பேசத்தொடங்கிய நெல்சன் கூறுகையில்,

படம் நாளை வெளியாக உள்ளது . எல்லோரும் படம் பாருங்கள். இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று சொல்வதை விட இந்த படம் சம்பந்தப்பட்ட சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதில் முதலில் படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்ஸ்க்கு நன்றி சொல்ல வேண்டும். பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் 10 மாதங்களில் இந்த படத்தை முடித்துள்ளோம்.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் டெக்னீஷியன் டீம்தான் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்தி உட்பட 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இதற்காக டெக்னிக்கல் டீம் இரவு பகல் பாராமல் வேலை செய்துள்ளனர். இந்த படம் செட்டுக்குள்ளேதான் எடுக்கப்பட்டது ஆனால செட் என்று தெரியாத அளவுக்கு ஆர்ட் வொர்க் பிரமாதமாக செய்திருந்தனர். ஆர்ட் டீம்க்கு நன்றி.

நான் இதற்கு முன்பு பண்ண படங்களை விட இதில் ஆக்ஷன் கட்சிகள் கொஞ்சம் அதிகம். இதை சிறப்பான முறையில் கொண்டுவந்த ஸ்டண்ட் டீம்க்கு நன்றி. அடுத்து இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் நன்றி. இவர்கள் அனைவரும் மற்ற படங்களில் இருந்தாலும், இந்த படத்திற்காக நேரம் ஒதுக்கி நடித்து கொடுத்திருக்கிறார்கள்.

இதுவரைக்கும் யாரும் என்னிடம் எந்த கம்ளைண்டும் பண்ணது இல்ல. அடுத்து இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே. நான் எப்போதும் ஹீரோயின் தேர்வு செய்யும்போது நமக்கு கம்படஃபுள்ளாக இருப்பாரா என்பதை பார்ப்பேன் பெரிய ஆர்ட்டிஸ்ட்க்கு பதிலாக ஓரளவு சின்ன ஆர்ட்சிஸ்டாக இருந்த பரவாயில்லை என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் விஜய் சாருடன் நியூ காம்போ தேவைப்பட்டது.

இந்த படத்தில் ஒரு கேரக்டருக்கு நியூ ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டது. அதில் சினிமா நல்ல தெரிஞ்ச ஆளா இருக்கனும் நினைத்தேன் செல்வா சார் ஞாபகம் வந்தது. ஆனால் அவர் நம்ம நடிக்க கூப்பிட்டா ஏதாவது கோபப்படுவாரா என்ற தயக்கம் இருந்தது. அப்போது அவர் சாணிகாகிதம் படம் பண்றதா கேள்விப்பட்டேன். அதன்பிறகு அவரிடம் கேட்டு கதை சொன்னேன். 10 நிமிஷம் கதை சொன்னேன் ஓகே பண்ணலாம் என்று சொல்லிவிட்டார். இப்படித்தான் செல்வராகவன் சார் பீஸ்ட் படத்திற்குள் வந்தார் என்று கூறியுள்ளார்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.