ஃபர்ஸ்ட் லேடி கமலா ஹாரிஸ்: ஜோ பைடனை கலாய்த்த சவுதி டி.வி. சேனல்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யாவும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக கச்சா எண்னெய் விலை பெருமளவு உயரும் aபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கலாய்த்து
சவுதி அரேபியா
தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான எம்.பி.சி. ஊடக குழுமத்தின் சேனலில் இந்த காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர்
ஜோ பைடன்
மற்றும் துணை அதிபர்
கமலா ஹாரிஸ்
ஆகியோர் போன்று சித்தரிக்கப்பட்ட இருவர் உரையாற்றுவது போன்று காட்டப்பட்டுள்ளது. ஜோ பைடன் ஞாபக மறதி உள்ளவர் போன்றும், அடிக்கடி தூங்கிவிடுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இவரை வச்சுக்கங்க.. எங்க ஆட்களை திருப்பி அனுப்புங்க.. ரஷ்யாவுக்கு ஆஃபர் தரும் உக்ரைன்!

அந்த காமெடி நிகழ்ச்சியில் ஜோ பைடன் கதாபாத்திரம் ஏற்றவர் பேசும்போது, இன்று நாம் இங்கே ஸ்பெயின் நெருக்கடி பற்றி பேச வந்திருப்பதாக குறிப்பிடுகிறார். உடனே கமலா ஹாரிஸ் கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் குறுக்கிட்டு திருத்தம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். அதன்பிறகு சரி செய்து கொள்ளும் ஜோ பைடன், ஆப்பிரிக்கா நெருக்கடி பற்றி பேச வந்திருப்பதாக கூறுகிறார். மறுபடியும் கமலா ஹாரிஸ் குறுக்கிட்டு திருத்தம் செய்யவே, ரஷ்யா நெருக்கடி குறித்து பேசவந்திருப்பதாக கூறுகிறார்.

ஆனால், ரஷ்ய அதிபரின் பெயர் அவருக்கு மறந்து போகிறது. இதுபற்றி கமலா ஹாரிஸிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் ஜோ பைடன், ‘புடின் நன்றாக என்னை கவனியுங்கள். உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்ல போகிறேன். அந்த செய்தி..’ என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஜோ பைடன் தூங்கி விடுகிறார். அவரை கமலா ஹாரிஸ் தட்டி எழுப்பியதும், சீன அதிபர் என தனது பேச்சை ஆரம்பிக்கிறார்.

அதனை கமலா ஹாரிஸ் சரி செய்கிறார். அதற்கு பைடன், நன்றி ஃபர்ஸ்ட் லேடி என கூறுகிறார். (அமெரிக்க அதிபரின் மனைவியைத்தான் ஃபர்ஸ்ட் லேடி என்று அழைப்பர்) அதன்பின்னர் ஜோ பைடன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார். அவரை கமலா ஹாரிஸ் பின்னால் இருந்து தாங்கி பிடித்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.

இதனால், அமெரிக்கா, சவுதி அரேபியா இடையேயான உறவில் கூடுதல் விரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, கச்சா எண்ணெய் நெருக்கடி பற்றி பேசுவதற்காக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். ஜோ பைடன் பதவியேற்ற பின்பு, ஒரு முறை கூட பேசாத நிலையில், தன்னை பற்றி ஜோ பைடன் என்ன நினைக்கிறார் என்ற கவலை தனக்கில்லை என்று பேட்டியொன்றில் இளவரசர் முகமது பின் சல்மான் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.