நியாயம்..கலந்த.. அரசியல்….!" – வாசகர்களின் கமெண்ட்ஸ்! #Like#Dislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 13ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு… நியாயமா? அரசியலா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Prassanna Sethu
ஒட்டு மொத்த தமிழக அரசியல் கட்சிகளலும் புறக்கணிக்க வேண்டும்
C Rama Nathan
நீட் நீட் னு புலம்பரங்களே டீ பார்ட்டிக்கு போய் கேட்கவேண்டியது தானே
Er.M.SenthilKumar
தமிழ்நாடு அமைச்சரவை அனுப்பிய 19 மசோதாக்களையும் கிடப்பில்போட்டு திட்டமிட்டு காலம் தாழ்த்துவது அநீதியாகும். அது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமல்ல; தமிழர்கள் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். ஆளுநர் செய்யும் தவறினை உணர வைக்க வேண்டும்.
image
Advice Avvaiyar
நியாயம் இல்லை.ஏற்க மறுத்து கலந்துக்கலன்னா, எல்லாம் சுமுகமாக நடந்திடுமா?ஒருவரது செயல் பிடிக்கவில்லை எனில், எதிர்ப்பைக் காட்ட வேறு வழிகள் இருக்கிறது. விடுத்த அழைப்பை நிராகரித்ததன் மூலம் எதை சாதிக்க முடிந்தது?இல்லை முடியும்?வழக்கமாக நடப்பது தானே நடக்கிறது?அது வேறு.இது வேறு. மத்தியில் ஆளுங்கட்சியின் சொல்லை நிறைவேற்றும் ஒருவரால் எதிர்க்கட்சிகளின் விருப்பம், கோரிக்கைகளை ஏற்க முடியாதே?இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?முன்பும் இது தானே நடந்தது?மேலிடத்தின் சம்மதம் முக்கியம். இடையில் இருப்பவரிடம் எதிர்ப்பைக் காட்டுவதில் என்ன பலன்? அழைப்பை ஏற்க மறுத்தது சரியல்ல.
Mani Maran
கண்டிப்பாக அரசியல் தான்.. இதுவே இவர்கள் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்திருந்தால் ஆளுநரின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல பேசிக்கொண்டு இருப்பார்கள்… கடந்த அதிமுக ஆட்சியில் தினம் தினம் புகார் மனுக்களை எடுத்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வந்தவர்கள் தான் இவர்கள்.. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுக்கென தனியாக ஒரு கட்சி இருப்பதையே மறந்து அறிவாலய ஒட்டுண்ணி போல மாறி விட்டனர்..
ஏ.எஸ்
ஆளுநர்கள் அரசியல் மார்ச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடக்கவேண்டும்.கட்சியின் நிலை சரியே!
BabuMohamed
நியாயம்..கலந்த.. அரசியல்….!”Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.