மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக நிலுவைத்தொகை வைத்துள்ள தமிழ்நாடு

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் மின் விநியோகத்தை மேற்கொண்டுள்ள நிறுவனங்கள், மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 17.3 சதவிகிதம் அதிகரித்திருப்பது தரவுகளிலிருந்து தெரியவருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 29 கோடி ரூபாயாக இருந்த நிலுவைத் தொகை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 244 கோடியாக அதிகரித்துள்ளது.
Tamil Nadu Electricity Regulatory Commission Directive || வீடுகளுடன் கூடிய  அலுவலக அறைகள்200 சதுர அடிக்கு மேல் இருந்தால் வணிக ரீதியிலான  மின்கட்டணம்தமிழ்நாடு ...

தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் மின் விநியோக நிறுவனங்கள் அதிக தொகையை நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவை வைத்திருக்கும் நிலையில், இரண்டாமிடத்தில் உள்ள மகாராஷ்டிரா 21 ஆயிரத்து 257 கோடி ரூபாயை நிலுவை வைத்திருப்பதாக தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.