ரூ.2.4 கோடி பணம், நகை கொள்ளை: நடிகை சோனம் கபூர் வீட்டில் கைவரிசை காட்டிய நர்ஸ் கைது கணவரும் சிக்கினார்

புதுடெல்லி, 
இந்தி திரையுலகில் பிரபல நடிகையான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கடநத சில நாட்களுக்கு முன்பு கொள்ளை போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் (வயது 31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சோனம் கபூரின் வீட்டில் கொள்ளையடித்ததை அபர்ணா ரூத் வில்சன் ஒப்புக்கொண்டார். அதன்படி அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு, நர்சின் கணவர் நரேஷ் குமார் சாகரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வரும் அவரையும் போலீசார் கைது செய்தனர். அதேநேரம் சோனம் கபூரின் வீட்டில் இருந்து கொள்ளை போன நகை மற்றும் பணத்தை இன்னும் மீட்கவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.