வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகை ஊழியர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாசமிகு வளர்ப்பு பிராணி மேஜர். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் டால்மேஷன் நாய் போல மேஜர் எப்போதும் ஜோ பைடன் அருகிலேயே சுற்றி திரியும். வெள்ளை மாளிகை தனது இல்லம் போலக் கருதும் மேஜர் அவ்வப்போது சில சேட்டைகளில் ஈடுபடும். தற்போது மேஜர் குறித்த ஓர் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேஜர் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மேஜர் வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஊழியர்கள் பலரை கடித்து தாக்கியதாகவும், அச்சுறுத்தியதாகவும் அதனை வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளியே தெரியாமல் மறைத்ததாகவும் இந்த 36 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஜோ பைடன் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேஜர் கடித்த கடியில் பல ஊழியர்களுக்கு ரத்தம் வந்ததாகவும் அவர்களது உடைகள் கிழிந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையை சுற்றி வரும்போது கிட்டத்தட்ட அனைத்து ஊழியர்களும் மேஜர் தங்களை கடித்துவிடுமோ என்கிற பயத்தோடு கடந்த ஆண்டு வலம்வந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஓர் வெறிகொண்ட நாயை ஜோ பைடன் தனது வளர்ப்பு பிராணியாக வளர்த்து வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக உலா வர அனுமதித்தது தற்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement