இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி தனது வீட்டு கடன் சேவை பிரிவான ஹெச்டிஎப்சி-ஐ இணைக்க முடிவு செய்த பின்பு ரீடைல் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது.
கைவிட்ட சீனா.. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் இலங்கை.. பில்லியன் கிடைக்குமா?
இந்த நிலையில் இன்று ஹெச்டிஎப்சி வங்கி தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி லாபம்
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 22.8 சதவீத வளர்ச்சியில் 10,055.20 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. இது 2,989.50 கோடி ரூபாயை வரியாகச் செலுத்திய பின்பு ஹெச்டிஎப்சி வங்கி பெற்றுள்ள வருமானமாகும். கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் வரிக்கு பிந்தையை லாபமாக ஹெச்டிஎப்சி வங்கி 8,187 கோடி ரூபாயைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎப்சி வங்கி வருமானம்
இதைத் தொடர்ந்து மார்ச் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கி மொத்த வட்டி வருமானமாக 10.2 சதவீத வளர்ச்சியில் 18,872.70 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 17120.20 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி வருமானம் என்பது ஹெச்டிஎப்சி வங்கியின் கடன் சேவையின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும், வைப்பு நிதிக்கு கொடுக்க வேண்டிய வட்டிக்கும் மத்தியிலான வித்தியாசம்.
ஹெச்டிஎப்சி வங்கி வட்டி வருமானம்
மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் நெட் இண்ட்ரெஸ்ட் மார்ஜின் அதாவது வங்கியின் சொத்துக்களில் இருக்கும் வட்டி வருமானத்தின் அளவு சதவீதமாக உள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 4.2 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டில் 4.1 சதவீதமாகவும் இருந்தது. தற்போது இதன் அளவு 4 சதவீதமாகக் குறைந்ததை ரீடைல் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
ஹெச்டிஎப்சி வங்கி வாராக் கடன்
இதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கியின் வாராக் கடன் அளவு மார்ச் காலாண்டில் 1.17 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 1.26 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 1.32 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி அல்லாத வருவாய்
ஹெச்டிஎப்சி வங்கியின் வங்கியின் வட்டி அல்லாத வருவாய் கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ. 7,593.90 கோடியாக இருந்த நிலையில் மார்ச் 2022 உடன் ஒப்பிடுகையில் 28.8 சதவீதம் அதிகரித்து ரூ.7,637.10 கோடியாக உயர்ந்துள்ளது. டிரேடிங் வருமானம் ஆண்டுக்கு 10.6 சதவீதம் உயர்ந்து, கட்டண வருமானம் ரூ.5,630 கோடியாக இருந்தது.
மொத்த இருப்புநிலை
மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த இருப்புநிலை ஆண்டு 18.4 சதவீதம் அதிகரித்து ரூ.17,46,871 கோடி ரூபாயில் இருந்து ரூ.20,68,535 கோடியாக உள்ளது. காலாண்டில் வைப்புத்தொகை 16.8 சதவீதம் அதிகரித்து ரூ.15,59,217 கோடியாக இருந்தது.
HDFC Bank Q4: Profit jumps to Rs 10,055 crore
HDFC Bank Q4: Profit jumps to Rs 10,055 crore 3 மாதத்தில் ரூ.10000 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தும் ஹெச்டிஎப்சி வங்கி..!