ஸ்டாலின் தலைமையில் ஆன்மீக அரசு: சட்டசபையில் சேகர்பாபு விளக்கம்

Minister Sekar Babu said DMK government is Spiritual government: திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆன்மீக அரசாக திகழ்கிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ”பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் ஒரு அன்னதான கூடம் அமைக்கப்பட்டு அன்னதான திட்டம் கொண்டு வரப்படும். 2008ம் ஆண்டு இறுதியில், குடமுழுக்கு நடைபெற்று இருக்கக்கூடிய நிலையில் இந்தாண்டே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படியுங்கள்: ஆளுனர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

மேலும், அன்னதான திட்டத்தை பொருத்தவரையில் 754 திருக்கோவில்களில் செயல்பட்டு வருகிறது. அங்கு, நாளொன்றுக்கு 75,000 பக்தர்கள் உணவு அருந்தி வருகின்றனர். முழு நேர அன்னதான திட்டம் 2 கோவில்களில் செயல்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் அதனை ஆராய்ந்து 5 திருக்கோயில்களுக்கு முழுநேர அன்னதான திட்டத்தை செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்.

அதேபோல், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.844 கோடி செலவில் 666 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆன்மீக அரசாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.