தன்னை தத்தெடுத்து வளர்க்கிறார்காளா…? மனம் உடைந்துபோன நடிகை சாய்பல்லவி…!

பிரேமம்
மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவிநடிப்பு, நடனம் என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளார்இந்த நிலையில் சாய்பல்லவி தனது பெற்றோரிடம் கேட்ட கேள்வி அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர்
அல்போன்ஸ்
புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானவர் நடிகை
சாய் பல்லவி
.அதற்கு முன்பாகவே
தாம் தூம்
, கஸ்தூரி மான் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மற்ற நடிகைகள் போல் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கும் நடனத்திற்கும் மட்டும் சாய்பல்லவி முக்கியத்துவம் கொடுப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடித்துள்ளது.

இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை

நல்ல தரமான கதைகளை மட்டும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி தமிழில் மாரி,
என்ஜிகே
உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்திவரும் சாய்பல்லவி கடைசியாக ஷ்யாம் சிங்க ராய் படத்தில்
தேவதாசி
கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளினார். ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி இப்பொழுது பழங்குடியின பெண்ணாக
விராட பருவம்
என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் மிக சரளமாக பேசக்கூடிய நேர்காணல் ஒன்றில் பேசியபோது பெற்றோர்களிடம் தான் கேட்ட ஒரு கேள்வி அதிர்ச்சியடைய வைத்துள்ள சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். சாய்பல்லவிக்கு ஃபேவரைட் திரைப்படமாக இன்றும் இருப்பது
கன்னத்தில் முத்தமிட்டால்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இலங்கை தமிழர்கள் குறித்தும் தாய் மகளுக்கும் இடையே உள்ள பாசத்தை குறித்தும் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம் ஆகும்.

கன்னத்தில் முத்தமிட்டால் பார்க்கும்பொழுது சாய்பல்லவி மிகவும் சிறிய வயது அப்போதே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் பாதிப்பு அவரை ஆட்கொண்டது அதன் காரணமாக படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்ற உடனே சாய் பல்லவி பெற்றோரிடம் நீங்க ரெண்டு பேரும் கருப்பா இருக்கீங்க ஆனா நா மட்டும் கலரா இருக்கன் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வருவது போல என்னயும் எங்கயாவது தத்து எடுத்துட்டு வந்தீங்களா என கேட்டுள்ளார் .

இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . அதற்கு அவரது பெற்றோரும் நீயும் உன் தங்கை பூஜாவும் ஒரே மாதிரி கலரா தான் இருக்கீங்க என கூறி சாய் பல்லவியை சமாதானம் செய்துள்ளனர். சிறுவயதில் கன்னத்தில் முத்தமிட்டால் பார்த்துவிட்டு வீட்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து சாய்பல்லவி பகிர்ந்துள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.