KGF 2: "அதிராவுக்கு டப்பிங் பேச ரொம்பக் கஷ்டப்பட்டேன்! ஏன்னா…"- டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாசன்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பேன் இந்தியா படமாக தமிழ் டப்பிங்கில் அதிரி புதிரியாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘கே.ஜி.எஃப் 2’. இந்தப் படத்தில் வில்லன் அதிரா கேரக்டரில் சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்த கேரக்டரின் தமிழ் டப்பிங்கை, டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாச மூர்த்தி செய்திருக்கிறார். அந்த டப்பிங் அனுபவம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“தியேட்டர்ல ‘கே.ஜி.எஃப் 2’ வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு. படம் பார்க்க தியேட்டருக்கு போனா ஒரே கூட்டமா இருக்கு. வாசல்ல ஆர்வமாக நிக்கற ஜனங்களைப் பார்க்க ஆச்சரியமா இருக்கு. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்துக்கு அப்புறம், தியேட்டர்ல 24 மணி நேரமும் ‘கே.ஜி.எஃப் 2’ ஓடிக்கிட்டு இருக்குனு கேள்விப்பட்டேன். சந்தோஷமாயிருக்கு” என்று தொடங்கிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாச மூர்த்தி.

அதிரா கேரக்டருக்கான டப்பிங் சீட் படிச்சப்போ என்ன தோணுச்சு?

K.G.F 2 | கே.ஜி.எஃப் 2

“டயலாக்ஸ் சீட் பார்த்துட்டு ரெடியாகி பேசல. படத்துல நடிக்குற ஆர்டிஸ்ட்டைப் பொருத்தவரைக்கும் கதையோட ஒன்லைன் சொல்லுவாங்க. இல்ல, கேரக்டர் பற்றிச் சொல்லுவாங்க. ஆனா, எங்களுக்கு மைக் முன்னாடி நின்னதுக்கு அப்புறம்தான் டயலாக்ஸ் சீட்டே கைக்கு வரும். எல்லாமே, ஆன் தி ஸ்பாட்ல பேசினதுதான். எமோஷன்ஸ், பாடி லாங்குவேஜ், வாய்ஸ் வெச்சுதான் எல்லாமே நாங்க பண்றோம்.”

சஞ்சய் தத் கேரக்டருக்காகப் பேசினப்போ எந்த டயலாக்ஸ் பேச கஷ்டமா இருந்தது?

“அவரோட எல்லா டயலாக்ஸ் பேசவும் கஷ்டப்பட்டேன். இன்னும் சொல்லணும்னா, குண்டு அடிக்கு அப்புறம் கோபமா அதிரா கேரக்டர் பேசின டயலாக்ஸ் ரொம்பவே கஷ்டமாயிருந்தது. ஒரு வலியோட அந்தக் குரல் இருக்கணும். அதே சமயம் கோபமாகவும் பேசணும். இதைக் கொண்டு வர்றது கஷ்டமாயிருந்தது.

இதுக்கு முன்னாடி சஞ்சய் தத் நடிச்சு தமிழ்ல டப்பான சில படங்களுக்கு அவரோட வாய்ஸ் கொடுத்திருக்கேன். சில படங்களில் தெலுங்குலகூட டப் பண்ணியிருக்கேன்.”

சஞ்சய் தத் கே.ஜி.எஃப் – 2 படத்தில்

பிரமாண்டமான குரலுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்குறப்போ ஏதாவது ஸ்பெஷலா தயாரானீங்களா?

“இல்ல, நார்மலா அப்படி எதுவும் பழக்கமில்லை. பெருமைக்காக எதுவும் சொல்லலை. வாய்ஸ் நல்லாயிருக்கறதுக்காக எந்தவொரு ஸ்பெஷல் காரியங்களையும் நான் பண்றதில்ல. எல்லாமே வழக்கமான முயற்சிகள்… பட், லிமிட்டோட இருக்கும்.”

டப்பிங் பேசுறப்போ அதிரா கேரக்டரின் கிராஃப் பார்த்து எங்கயாவது பிரமிச்சு போனீங்களா?

“ஆக்சுவலி, இந்த கேரக்டருடைய எல்லா டயலாக்ஸ் பேசறப்போதும் பிரமிப்பு இருந்தது. டப்பிங் ரூம்ல ஐம்பது இன்ச்ல டிவியிருந்தது. அதுல அதிரா கேரக்டரை பார்த்தப்போ மான்ஸ்டர் மாதிரியிருந்தார். ஸ்க்ரீன் முழுக்க அவர் மட்டுமே தெரிஞ்சார். அவரோட பாடி லாங்குவேஜூக்கு வாய்ஸ் ஒத்துப் போகுதானு பார்த்துட்டிருந்தேன். பேசுனதை ஹெட் போன்ல கேட்குறதைவிட ஸ்பீக்கர்ல கேட்டு சரியாயிருக்கானு செக் பண்ணினேன். எல்லா நேரமும் டயலாக் ரைட்டர் அசோக் சார் கூட இருந்தார். அவர்கிட்ட கேட்டுட்டு எல்லாம் சரியாக பண்ணேன். மிருகத்தன்மையான மான்ஸ்டருக்கு சரியா வாய்ஸ் கொடுக்கலைன்னா அது படத்தைத்தான் பாதிக்கும்.”

K.G.F 2 | கே.ஜி.எஃப் 2

‘கே.ஜி.எப் – 2’ இல்லாம பிற மொழி படங்கள் எதுக்கெல்லாம் டப்பிங் கொடுத்திருக்கீங்க?

“எப்போவும் ரெண்டு ஷேட் இருக்கும். தமிழ்ல வில்லனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பேன். தெலுங்குல ஹீரோவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பேன். ‘சிங்கம்’ படத்துக்கு தெலுங்குல சூர்யாவுக்குப் பேசியிருக்கேன். ‘என்னோட தமிழ்ப் படத்தை விடவும், தெலுங்குல உங்களுடைய வாய்ஸை வெச்சிக்கிட்டு என்னை அங்கக் கொண்டு போயிட்டீங்கனு’ சூர்யா சொன்னார். ‘அந்நியன்’ படத்தில் விக்ரமுக்கு தெலுங்கு டப்பிங் பேசுனேன். இதுல மூணு கேரட்கருக்கும் வித்தியாசம் காட்ட வேண்டியதிருந்தது. முக்கியமா, அம்பி கேரக்டருக்கு தெலுங்குல டப்பிங் பேச ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஏன்னா, என்னுடைய வழக்கமான ஜானர்ல இருந்து அது கொஞ்சம் வேற மாதிரி இருந்தது. நானே ஹீரோ, நானே வில்லன். ‘அந்நியன்’ தெலுங்கு டப்பிங் பார்த்துட்டு விக்ரம் சார், சரியாயிருக்கு. ஶ்ரீனிவாசன் சார் மொத்தப் படத்துக்கும் டப்பிங் பேசட்டும்னு சொன்னார்.”

டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாசனின் முழு வீடியோவையும் இங்கே காணுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.