தமிழகத்தை திணறடித்த மின்வெட்டு: நள்ளிரவில் ட்வீட் செய்த செந்தில் பாலாஜி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது.

குறிப்பாக கடலூர், விருத்தாசலம் , விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது.

பல இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன. சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து டுவிட்டரில் மின்வெட்டு தொடர்பாக புகார்களை அளித்து வருகின்றனர்.

திமுகவின் 2006-2011-ம் ஆண்டு ஆட்சியை ஒப்பிட்டும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டனர். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நகர்ப் புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது.

மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பான ஆதார் அட்டை; டவுன்லோட் செய்வது எப்படி?

ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.