‘கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ – சசிகலா உறுதி

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு சம்பவத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல் ஒன்று, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு முக்கிய பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக மனோஜ், சயான் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017-ம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிப்புரிந்து வந்த தினேஷ், தற்கொலை செய்து கொண்டது என அடுத்தடுத்து பல சந்தேகங்களும் மர்ம முடிச்சுகளாக இருந்தது இந்த வழக்கு.
இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக மறு விசாரணை நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். மேற்கு மண்டல காவல் துறை ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
image
கொட நாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 217 பேரிடம் நடத்தி உள்ளனர். இந்நிலையில், கோட நாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவரான ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். வயது மூப்பின் காரணமாக ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், சென்னை தி.நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு நேரிடையாக சென்று விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் நேற்று காலை 10.55 மணியளவில் ஐஜி சுதாகர் தலைமையில் நீலகிரி மாவட்ட காவல்துறை எஸ்பி ஆஷித் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, பெண் டிஎஸ்பி, பெண் காவல் ஆய்வாளர், டைப்பிஸ்ட், குற்றப்பிரிவு காவலர் உட்பட 8 பேர் சசிகலாவின் வீட்டிற்கு சென்று 6 மணிநேரம் விசாரணை நடத்தி, சசிகலா அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
image
இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. காலை 10 மணிக்கு சசிகலாவிடம் கோடநாடு கொலை-கொள்ளை தொடர்பாக விசாரணை தொடங்கியது. சசிகலாவிடம் மாலை 2 மணியளவில் விசாரணை முடிந்தது.கோடநாடு விவகாரத்தில் தொடர்ந்து நிகழ்ந்த மரணங்கள், விபத்துகள், தற்கொலை குறித்தும் வெவ்வேறு கோணங்களில் சசிகலாவிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய விசாரணையின் போதும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சசிகலா பொறுமையாக பதில் அளித்துள்ளார். விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை யார் காரணமானவர்களை அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “காவல்துறை என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி இருக்கிறேன். முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறேன். எங்களை பொறுத்தவரை கொடநாடு பங்களா அவை ஒரு கோயிலுக்கு நிகராக பார்த்தோம்.
கட்சிக்காரர்களும் அப்படித்தான் பார்த்தார்கள். ஜெயலலிதாவிற்கு மன அமைதியையும், சந்தோசத்தையும் கொடுத்த இடம். கொடநாடு பங்களா காவலாளி, ஓம் பகதூர் மற்றும் அவரது குடும்பம் மறைவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்” இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.