விலை உயர்ந்த செல்போன் போச்சே… புஷ்பவனம் குப்புசாமிக்கு நேர்ந்த துயரம்!

Singer Pushpavanam Kuppursamy Cell Phone Theft : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரும், நாட்டுப்புற பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி இன்று பல்லாவரம் சந்தைக்கு சென்றபோது அவரது செல்போனை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்லாமல் மாடித்தோட்டம் அமைப்பதற்கு புகழ்பெற்றவர் புஷ்பவனம் குப்புசாமி. இவரும் இவரது மனைவியுமான அனிதா குப்புசாமி இருவரும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளனர்.

நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்ற இந்த தம்பதிகள் தங்களது வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து அதில் பல்வேறு வகையாக காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் மாடித்தோட்டம் சிறப்பாக முறையில் அமைப்பது எப்படி என்பது குறித்து யூடியூப் வீடியோ மூலம் தகவல் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், காய்கறிகள் செடி மற்றும் இதர விதைகள் உள்ளிட்ட தோட்டத்திற்கு தேவையான செடிகளை வாங்குவதற்காக புஷ்பவனம் குப்புசாமி இன்று பல்லாவரம் சந்தைக்கு வந்துள்ளார். சென்னையில் புகழ்பெற்ற சந்தைகளில் ஒன்றாக அறியப்படும் பல்லாவரம் சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறும். இதில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் டெல்லி சென்ற ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர். இதனை பயன்படுத்திக்கொண்டுள்ள மர்மநபர்கள் பல்லாரம் சந்தையில் செல்போன் திருடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போனை சேர்த்து மொத்தம் 7 செல்போன்களை திருடியுள்ளனர்.

இது குறித்து செல்போனை பறிகொடுத்தவர்கள் அனைவரும் பல்லாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் விலை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்தையில் பிரபல பாடகர் ஒருவரின செல்போன் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.