
ரஷ்ய படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடரும் நிலையில், பல நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன. அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, உக்ரைனுக்கு இஸ்ரேல் அரசு உதவ முன்வந்துள்ளது.
மனிதாபிமான உதவியாக குண்டு துளைக்காத கவச ஆடைகள், தலைக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.