பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்களால் பதற்றம் (video)


புதிய இணைப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து தற்சமயம் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.  

முதலாம் இணைப்பு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.  

கொழும்பு காலி முகத்திடலை நோக்கி இவர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர். 

கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுக்கப்படுகின்றது. 

எனினும், இந்த போராட்டங்களை தடுப்பதற்கென பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளதுடன், கடமையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

GallerySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.