பிள்ளைச்சாவடி பள்ளியில் முப்பெரும் விழா| Dinamalar

புதுச்சேரி, :பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில், சாலை பாதுகாப்பு, இயற்கையை காப்போம், கல்வியின் முக்கியத்துவம் குறித்த முப்பெரும் விழா நடந்தது.தலைமையாசிரியை திலகவதி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பரிசு வழங்கினார். தொடர்ந்து, செல்லிப்பட்டு பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம், பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேசிய பசுமை படையின் பொறுப்பாசிரியர் சசி, பொம்மலாட்டம் குறித்து பயிற்சி அளித்தார்.விழா ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செல்வநாயகி, உமாமகேஸ்வரி, பிரேமானந்த் கோன்தரன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.