டெல்லி: 35 ஏக்கர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

டெல்லி குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீ, நீண்ட போராட்டத்துக்குப் பின் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியின் பால்ஸ்வா பகுதியில் கடந்த 1994 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குப்பைக் கிடங்கு தற்போது சுமார் 35 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. 8 லட்சம் டன் குப்பை தேங்கியுள்ள நிலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவிய நிலையில், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
image
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஒரே மாதத்தில் நான்காவது முறையாக குப்பைக் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: 11 பேர் உயிரிழப்பு: தஞ்சை தேர் விபத்து நடந்தது எப்படி?- முழு விவரம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.