மீண்டும் கைதாகும் சர்ச்சை நடிகை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழ் சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சைகளை கிளப்புபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் குறித்து மிக இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில்
மீரா மிதுன்
மீண்டும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் மாடல் என தன்னை தானே சொல்லி கொள்ளும் மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்கி மீரா மீதுன் ஏமாற்றியதாக தொழிலதிபரான ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக மீரா மீது காவல் நிலையத்தில் பல புகார்களும் உள்ளன.

இந்நிலையில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டி மார்ச் 16ம் தேதி வாட்சப்பில் ஆடியோ பதிவிட்டது தொடர்பாக மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிரட்டலாக வெளியான ‘பிசாசு 2’ படத்தின் அப்டேட்: வெறித்தனமான காத்திருப்பில் ரசிகர்கள்.!

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கும்படியும், தன்மீது உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாக்கல் செய்திருந்தார் மீரா மிதுன். நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிரபலமானவர்கள் மீது அவதூறு பரப்புவதையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவிடுவதும் மீராமிதுனுக்கு வாடிக்கை என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைதாக ஜாமீனில் வெளியில் வந்துள்ள மீரா மிதுன், தற்போது முதலமைச்சர் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதனையடுத்து காவல்துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதி முன் ஜாமீன் கோரி மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும் அவரது பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விஜய் பட வசனத்தை மேடையில் பேசிய ஜீவா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.