11 ஆதீன மடாதிபதிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் உள்ள 11 ஆதீனங்களின் மடாதிபதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
மே 5-ஆம் தேதி இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆதீனங்களின் மடாதிபதிகளை முதலமைச்சர் சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களோடு கோவை சாந்தலிங்க அடிகளார் மடம், கவுமார மடாலயம், மயிலம் சிவஞான பாலய மடம், வேளாக்குறிச்சி மடம் ஆகியவற்றின் மடாதிபதிகளும் முதலமைச்சரை சந்தித்தனர்.

சூரியனார் கோயில் சிவக்கிரக யோகிகள் மடம், அழகிய மணவாள ஜீயர் மடம், பெருங்குளம் செங்கோல் மடம், குன்றக்குடி துலாவூர் ஆதினம் ஆகியவற்றின் மடாதிபதிகளுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய செய்தி: சென்னை: ‘எங்களை காப்பாத்துங்க என போன் செய்த மூதாட்டி’ – சாதுர்யமாக மீட்ட போலீசார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.