பல்கலை., பேராசிரியருக்கு விருது| Dinamalar

புதுச்சேரி-சிறந்த கல்வியாளருக்கான விருது பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் ராமையா, துணை வேந்தர் குர்மீத்சிங்கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.டெல்லியில் இயங்கி வரும் புதிய கல்விக் குறியீட்டு நிறுவனம் சார்பில், இந்திய அளவில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் அதிகாரிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த கல்வியாளருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சிறந்த கல்வியாளருக்கான விருது, புதுச்சேரி பல்கலைக் கழக தொலைதுார கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ராமையாவிற்கு வழங்கப் பட்டுள்ளது.இந்த விருதினை மத்திய அரசின் அகில இந்திய … Read more

கூடுதல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்கா முடிவு| Dinamalar

வாஷிங்டன் : கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தினமும் கூடுதலாக 10 லட்சம் ‘பேரல்’ கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 4500 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால் உலகளவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. எனவே விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்க … Read more

பொலிஸ் ஊடரடங்கு நீக்கம்

கொழும்பில் சில பகுதிகளில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் ,கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு கல்கிசை மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளிலும் மற்றும் கம்பாஹ மாவட்டத்தில் களனி பொலிஸ பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் மா அதிபரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு ,இன்று 2022.04.01 அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு … Read more

தோல்வியை ஏற்காமல், என் வாழ்நாள் முழுவதும் போராடினேன்: இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை (மார்ச் 31) தனது பிடிஐ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தான் தோல்வியை ஏற்காமல் இறுதிவரை போராடுவேன் என்று கூறினார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், “நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, நான் கடைசி பந்து வரை விளையாடும் வரை விளையாடியதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில்லை. நான் துவண்டு விடுவேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் … Read more

திமுக கவுன்சிலர்கள் தமிழகம் முழுவதும் ஆதிக்கம், அராஜகம், அட்டகாசம், அடக்குமுறை.. ஓபிஎஸ் கண்டனம்.!!

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. பெண் உறுப்பினர்களின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் அத்துமீறிய செயல்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் மிரட்டப்பட்டும், தாக்கப்பட்டும் வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரின் ஆதிக்கம், அராஜகம், அட்டகாசம், அடக்குமுறை தமிழ்நாடு முழுவதும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் … Read more

`கிரிமினல்களின் கூடாரமாகிவிட்டது’ – புதுச்சேரி பிப்டிக் (PIPDIC) தொழில் வளர்ச்சி மையத்தின் நிலை!

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் அரசு தொழில் வளர்ச்சி மையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள். புதுச்சேரி திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு தொழில்துறையின் (PIPDIC)  சார்பில் தொழில் நகரம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு என இருவகை உற்பத்திப் பொருள்களை இங்கு உற்பத்தி செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் இந்த இடத்தில் 20 பெரிய … Read more

திமுக அலுவலக திறப்பு விழா | டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு

சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா … Read more

இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார்: மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, தமிழக அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 2-ஆம் திகதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, … Read more

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை- வன்முறையால் கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்

கொழும்பு : வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகி உள்ளது.  மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.  இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை … Read more